தமிழகத்தின் தென் பகுதியான சாத்தான்குளத்தில் இருந்து வடக்கு பகுதிகளை இணைக்கும் விதத்தில் புதிய பேருந்துகள் இயக்க வேண்டும் என மாநில பயணியர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் தென் பகுதியான சாத்தான்குளத்தில் இருந்து புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பனிமனையிலிருந்து தமிழகத்தின் வட பகுதிகளான சென்னை கோவை திருப்பூர் திருச்சி மேட்டுப்பாளையம் சேலம் ஈரோடு இராமேஸ்வரம் தேனி கம்பம் போன்ற பகுதிகளை நேரடியாக இணைக்கும் விதத்தில் பேருந்துகள் இயக்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் மேலும் இந்தப் பகுதியில் உள்ளவர்கள் வடபகுதியில் அதிகமானோர் வேலை செய்தும் படித்தும் இது சம்பந்தமாக அவர்கள் இந்தப் பகுதிகளுக்கு சென்று வருவதற்கு பேருந்து வசதி இல்லாமல் அதிக கஷ்டப்படுகிறார்கள்.
இது ரயில் வசதியும் இல்லாத பகுதி ஆகவே தமிழக அரசு மக்களுக்காக அதிகமான புதிய பேருந்துகளை இயக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக புதிய பேருந்துகளை இயக்கி உதவிபுரிய வேண்டும் வயது முதிர்ந்தோர் கர்ப்பிணி பெண்கள் வியாதியுடையவர்கள் மாற்றுத் திறனாளிகள் என அதிமான மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதிகளில் பேருந்துகளின் இயக்கமும் குறைவாக உள்ளது. அதிலும் சனி ஞாயிறு தினங்களில் இந்த பகுதியில் ஓடும் பேருந்துகள் அனைத்தும் மாற்று வழித்தடத்தில் (மதுரை) இயக்கப்பட்டு விடுகிறது இதனால் இந்த பகுதி மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
ஆகவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து புதிய பேருந்துகளை நாசரேத் நாலுமாவடி ஏரல் தூத்துக்குடி வழியாக இயக்கியும் இந்தப் பகுதியில் ஓடக்கூடிய பேருந்துகளை சனி ஞாயிறு தினங்களில் மாற்று வழித்தடங்கள் இயக்க தடை விதிக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இது சம்பந்தமாக தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பகுதி மக்களின் வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று மாநில பயணி நல சங்க தலைவர் சாந்தகுமார் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். மேலும் புதிதாக துவங்கப்பட்ட இந்த கிளையில் குறைந்த பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது. ஆகவே இந்த கிளையின் பேருந்துகளை கூட்டுவதற்கும் கூடுதலாக நகரப் பேருந்துகளை இயக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.


