தூத்துக்குடி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் வல்லநாடு ஆற்றுப்பாலத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு ரூ. 349.50 கோடி செலவில் 47.25 கி.மீ தொலைவிலான தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே வல்லநாடு பகுதியில் புதிதாக நான்குவழி ஆற்றுப்பாலம் கட்டப்பட்டது. இந்த புதிய பாலம் பலமுறை சேதமடைந்து, குழி ஏற்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலத்தின் ஒரு பகுதியில் மூன்றாவது முறையாக பழுது ஏற்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு பகுதி வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெற்றதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இந்நிலையில், பாலத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். பாலத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


