எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் அவர்களை சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
நமது மாவட்டத்துக்குள் சுமார் 45 கிலோ மீட்டர் தாமிரபரணி ஓடுகிறது. இந்த நதியில் இருபுறமும் பிரமாண்டமாக கரைகள் உள்ளன. ஆனால் இந்த கரைகள் மற்றும் தாமிரபரணியில் நீர் கருவை செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் நீர் ஓட்டம் தடைபடுவதுடன் தாமிரபரணி பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே தாமிபரணியில் உள்ளே உள்ள நீர் கருவை செடிகளை அகற்றி, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். கடந்த காலத்தில் ஒரே நாளில் தாமிரபரணி கரை நெடுக்க இந்தபணி செய்த காரணத்தினால் பணி நிறைவு பெறவில்லை. எனவே கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் தாங்கள் ஒவ்வொரு பஞ்சாயத்தாக அந்தந்த பகுதியில் உள்ள சமூக சேவை நிறுவனம், தொண்டு நிறுவனம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகள் மூலமாக தாமிரபரணி கரையை சுத்தப்படுத்தி நீர் கருவை மரங்களை அகற்றி, மரங்களை நட்டு தர ஆவண செய்ய வேண்டுகிறேன். என்று கூறியிருந்தார்.
அதை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். முதல் கட்டமாக ஆழிகுடி, ஆறாம்பண்ணை , முத்தாலங்குறிச்சி ஆகிய தாமிரபரணி கரை கிராமத்தில் உள்ள முள்செடிகளை அகற்றி அதில் மரக்கன்று நட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் கண்ணபிரான்
உதவி ஆட்சிதலைவர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.