1910 – பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அதிபர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அதிபராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று.
1917 – உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1923 – ஜேர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்)
1936 – ஸ்பானிய அரசியல்தலைவர் ஜோசே அண்டோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா, சிலவாக்கியா ஆகியன அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தன.
1947 – இளவரசி எலிசபெத் இளவரசர் பிலிப்பை திருமணம் புரிந்தார்.
1962 – சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்தாதை அடுத்து, ஐக்கிய அமெரிக்கா கரிபியன் நாட்டுக்கெதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது.
1977 – ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார்.
1979 – சவுதி அரேபியாவில் மெக்காவில் காபா மசூதியைத் தாக்கிய சுணி முஸ்லிம் தீவிரவாதிகள் 6,000 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரெஞ்சுப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
1985 – மைக்ரொசொஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.
1988 – ராஜிவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.
1992 – இங்கிலாந்தில் வின்சர் அரண்மனையில் தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
1993 – மகெடோனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 116 பயணிகளில் 115 பேரும் 8 சிப்பந்திகளும் உயிரிழந்தனர்.
1994 – அங்கோலா அரசுக்கும் யுனீட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.
1998 – பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1999 – மன்னார் மடு தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.


