சாலினி (பிறப்பு: நவம்பர் 20, 1979) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பேபி சாலினி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். தனது மூன்றாவது வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாள தொண்ணூறு படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித் குமாரைத் திருமணம் செய்த பின்னர் நடிப்பிலிருந்து விலகினார்.இவர் மலையாளத்தில் 25-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.


