தூத்துக்குடி மாவட்டம் ஆழிகுடி கிராமத்தில் புனித குழந்தை இயேசு தெரேசம்மாள் ஆலயம் அமைந்துள்ளது. ஆலய பங்குத்தந்தை அம்புரோஸ் அறிவுறுத்தலின்படி மக்களைப் புனித யாத்திரைக்குத் தயார் செய்து ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களான திருச்செந்தூர் அமலி அன்னை திருத்தலம்,மணப்பாடு,உவரி அந்தோணியார் ஆலயம்,சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலயம்,திருக்கல்யாண மாதா ஆலயம் போன்ற தேவாலயங்களுக்குச் சென்று வழிபட்டனர் . கருங்குளம் மடத்தைச் சேர்ந்த அருட்சகோதரிகள் தலைமையில் இக்குழு சென்றது. 30க்கு மேற்பட்ட இறைமக்கள் புனித யாத்திரையில் கலந்து கொண்டனர்.


