ஆத்தூர் அருகே கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அருகேயுள்ள குருவித்துறை பரதர் தெருவை சேர்ந்தவர் ஜெபமாலை. இவரது மகள் ஜெனிபர் (17). காயல்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தந்தை இறந்து விட்ட நிலையில் தாய் செங்கல் சூளையில் வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ஜெனிபர், கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார.


