மதுரை ரயில்கோட்ட டி.ஆர்.எம் ஒம் பிரகாஷ் மீனா நெல்லை திருச்செந்தூர் ரயில் நிலையங்களை ஆய்வு செய்ய தனி இரயிலில் சனிக்கிழமை வருகை தந்தார். இவர் திருச்செந்தூரில் இருந்து ஒவ்வொரு ரயில் நிலையங்களையும் ஆய்வு செய்து கொண்டு வந்தார். திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சனாவிளை, ஸ்ரீவைகுண்டம் போன்ற பகுதிகளில் ஆய்வு செய்தவர் செய்துங்கநல்லூர் வரும் போது தொடர்ந்து கிராஸிங் ரயில் வரும் என்பதனால் ஆய்வு செய்ய இறங்காமல் கிளம்ப ஆயத்தமானார். அப்போது அவரிடம் மனு கொடுக்க வந்த செய்துங்கநல்லூர் பயணிகள் சங்கத்தினை சேர்ந்தவர்கள் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் அவரிடம் மனு கொடுக்க சன்னல் வழியாக முயற்சி செய்தனர். ரயில் நிற்காமல் மெதுவாக கிளம்பியதை கண்டு மனுவை எப்படியாவது கொடுதது விட வேண்டும் என்று ரயில் பின்னால் பயணிகள் ஓட ஆரம்பித்தனர். இதை கண்ட டி.ஆர்.எம் ரயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி பொதுமக்களிடம் மனுவை பெற்று கொண்டார்.
அந்த மனுவில் கொரானா காலத்துக்கு முன்பு வரை செய்துங்கநல்லூரில் நின்று சென்ற பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது செய்துங்கநல்லூரில் நின்று செல்லவில்லை. நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நின்று செல்கிறது. செய்துங்கநல்லூர் மற்றும் தாதன்குளத்தில் மட்டும் நின்று செல்லவில்லை. எனவே இந்த இரு ரயில் நிலையத்திலிலும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயி¬¬¬ நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்று க்கொண்டு ஆவண செய்வதாக வாக்களித்த அவர் தொடர்ந்து ரயில் நிலையத்தினை ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.
செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டருக்கு வந்த அவர், அங்கே உடைந்த கண்ணாடியை கண்டு, அததை உடனே மாற்ற கூறினார். ரயில் நிலையத்தில் ஏறுவதற்கு அமைக்கப்பட்ட ரேம் மிக உயரமாக இருப்பதால் இங்கே எப்படி குழந்தைகள் ஏறும் எனவே அதை சீர் செய்யுங்கள் என்று கூறினார். தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன் வெளியே வந்து, ரயில்வே நிலங்களை பார்வையிட்டார். அதன் பின் காத்திருப்போர் அறை, மாடி அறை உள்பட பல பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
செய்துங்கநல்லூரில் பிளாட்பார்மை உயர்த்தும் பணி மற்றும் நீட்டிக்கும் பணி மிக விரைவில் துவங்க உள்ளது. மேலும் ரயில் நிலையத்தில் பயணிகள் கடந்து செல்லும் பாலத்தின் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. ரயில் நிலையத்தில் மூன்றாம் பிளாட்பார்ம் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. எனவே டி.ஆர்.எம். ஓம் பிரகாஷ் மீனா செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தினை பார்வையிட்ட பின் இந்த பணிகள் எல்லாம் விரைவாக நடைபெறும் என பயணிகள் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
அதன் பின் அவர் தனி ரயிலில் திருநெல்வலி நோக்கி கிளம்பினார்.
செய்துங்கநல்லூர் ரயில் நிலைய மேலாளர் சித்திரை புத்திரன் செய்துங்கநல்லூர் பயணிகள் நலச்சங்கத்தினை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வேம்பு துரை, அப்துல், அப்துர் காதர், பின்னை வனம், அப்துல் ரகுமான், கோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


