பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் பணிசெய்துவரும் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.
சென்னை வேல்ஸ் பல்கலைகழகம் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை வேல்ஸ் பல்கலைகழக அரங்கில் நடைபெற்றது. தமிழகத்தில் மிகச் சிறந்த 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கினர். அதில் தூத்துக்குடி, பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் பணிசெய்துவரும் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் ஆவார். அவருக்கு வேல்ஸ் பல்கலைகழகம் மூலம் சிறந்த ஆசிரியருக்கான விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது. இவருக்கு ரூபாய் 30,000 மதிப்புள்ள ஆண்ட்ராய்டு டேப் வழங்கப்பட்டது. விருதை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். விழாவில் வேல்ஸ் பல்கலைகழக நிறுவனர் டாக்டர் ஐசரி கணேசன், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், உள்பட பலர் கலந்துகொண்டனர். விருது பெற்ற தலைமையாசிரியரை மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.


