தூத்துக்குடியில் 2 கப்பல் கட்டும் தளங்கள் தென்தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய அடித்தளம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் 2 கப்பல் கட்டும் தளங்கள் அமைய உள்ளன. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாறு. இப்போது தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமைய உள்ளன. தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதியதொரு அடித்தளமாக இவை அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


