தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 2 பேர், புதிதாக மனு கொடுக்க வந்த 47 பேர் என மொத்தம் 49 மனுதாரர்கள் எஸ்பியிடம் தங்கள் குறைகளை தெரிவித்து புகார் மனு அளித்தனர். மேலும், புகார் மனு அளிக்க வந்த முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் எஸ்பி தரைதளத்திற்கு இறங்கி வந்து மனுவை பெற்றுக் கொண்டார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அவர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


