விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மருத்துவமனைக்கு திமுக மருத்துவர் அணி சார்பில் இலவச மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை நினைவாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பில் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் இலவச மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்வில் புதூர் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சௌந்தரராஜன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மருத்துவ அணி அமைப்பாளர் ஸ்ரீராம், வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன், புதூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயவேல் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


