பாளை என்.ஜி.ஒ காலனி ரோஸ் மேரி மாடல் பப்ளிக் பள்ளியில் ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் குறித்து கருத்தரங்கு நடந்தது. பள்ளி முதல்வர் மாலின் பிரமிளா தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் லில்லி திவ்யா வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்துகொண்டு உலக நாகரீகத்தின் தொட்டில் ஆதிச்சநல்லூர் குறித்தும் இங்கு இந்தியாவிலேயே முதல் முதலில் அமைந்த சைட் மியூசியம் குறித்து கருத்துரை வழங்கினார். வரலாற்று ஆசிரியர் நிர்மலா நன்றி கூறினார்.


