தமிழகக் காவல்துறையில் பெண் காவலர்கள் பல்வேறு வகையான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் பெண் காவலர்களின் நலனிற்காகத் தமிழக அரசால் தென்காசி மாவட்ட காவல் துறைக்கு அதிநவீன நடமாடும் கழிப்பறை வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் மூன்று கழிப்பறைகள்,ஒரு உடை மாற்றும் அறை, தானியங்கி நாப்கின் இயந்திரம்,நாப்கின் எரியூட்டி இயந்திரம் போன்ற அதிநவீன வசதிகள் அமைந்துள்ளது.இந்த அதிநவீன வாகனம் பாதுகாப்புப் பணியில் உள்ள பெண் காவலர்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளை எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது.


