ஆழ்வார்திருநகரியில் வாலிபரிடம் பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுத்த ரவுடி கைது.
பாளையங்கோட்டை பரிசுத்த ஆவி தெருவைச் சேர்ந்த சுந்தர் என்பவரது மகன் கிருஷ்ணகுமார் வயது 27. இவர் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரும் இவரது நண்பர் ஐயப்பனும், ஆழ்வார்திருநகரி பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த போது, முதலைமொழியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது மகன் மாணிக்க ராஜ் வயது 34 என்பவர், கிருஷ்ணகுமாரிடம் நான் பெரிய ரவுடி எனக்கு நீ பணம் கொடு என பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். உடனே கிருஷ்ணகுமார், ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் ஆழ்வார்திருநகரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப் பதிவு செய்து மாணிக்கராஜை கைது செய்தார். ஏற்கனவே மாணிக்க ராஜ் மீது ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது


