சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில், வடக்கு மாவட்ட திமுக சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரன் ஒண்டிவீரனின் திருவுருவப் படத்திற்கு மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலையில், வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, ‘ஒண்டிவீரன் கலை பண்பாட்டு மையம்’ சார்பில் நடைபெற்ற விழாவில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ஊக்கத்தொகை மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஒண்டிவீரன் கலை பண்பாட்டு மைய நிர்வாகிகள் தலைவா் முருகேசன், செயலாளர் சங்கரன், பொருளாளர் இராமசந்திரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளா் ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி உள்பட பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.


