தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோவில்பட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. பெருமாள்சாமி ஆலோசனையின்படி, கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் அருண்பாண்டியன் மற்றும் வட்டாரத் தலைவர் ரமேஷ் மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டப் பொதுச் செயலாளர் (ஐஎன்டியூசி) ராஜா சேகரன், மாவட்டச் செயலாளர் துரைராஜ், மற்றும் மாவட்ட நிர்வாகி ஆழ்வார்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டப் பொருளாளர் ராஜாராம் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். எஸ்சி/எஸ்டி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் மாரிமுத்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை வாசிக்க, அதைத் தொடர்ந்து அனைத்து நிர்வாகிகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் செல்லதுரை, முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் வேணுகோபால், தங்கபாண்டியன், வட்டாரத் தலைவர் சங்கர், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அரவிந்த், தொகுதித் தலைவர் சுடலைமணி, மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகம், சண்முகவேல், மாரிமுத்து, ராஜா, தாஸ், நல்லமதி, வேல்சாமி, கோபால், பிரபாகரன், தர்மர், தட்சணாமூர்த்தி, அய்யாசாமி, மாடசாமி, முருகன், இபி மாரியப்பன், அய்யாதுரை உட்படத் திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


