19.8.2023 அன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் டாக்டர் T.S. செல்வ விநாயகம் அவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வல்லநாட்டில் ஆய்வு மேற்கொண்டார்கள்
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவு கட்டுமான பணிகளை ஆய்வு செய்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு பணியினை சிறப்பாக செய்திட பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார் மேலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் பழைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை பார்வையிட்டு பணிகளை விரைவாக முடித்து விட அறிவுறுத்தினார் கட்டிடத்தினை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு முறையாக பயன்படுத்தவும் அறிவுறுத்தினார் மேலும் சுகாதார நிலையத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார் அப்பொழுது தாய்சேய் நல சேவைகளை திறம்பட செய்திடவும் சுகப்பிரசவங்களை அதிகரிக்கவும் ஆலோசனைகள் வழங்கினார் இரத்தசோகை உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு அயன் சுக்ரோஸ் சிகிச்சை முறையாக வழங்கிடவும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அனைத்து பயனாளிகளுக்கும் சென்று அடையும் முறையில் பணியாற்றவும் மற்றும் LIMS, HIMS2.0 திட்டங்கள் செயல்படும் முறை பற்றி ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்
இந்த ஆய்வில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன் திருநெல்வேலி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் V. ராஜேந்திரன் உதவி திட்ட மேலாளர் டாக்டர் பொன் பத்மநாபன் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணஜோதி துணை இயக்குனர் சுகாதார பணிகள் அவர்கள் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் வல்லநாடு மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணவேணி சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன் சுகாதார ஆய்வாளர் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்


