கராத்தே சிறப்பு பயிற்சி முகாமில் கருப்பு பட்டயம் வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் சோபுகாய் கோஜிரியு கராத்தே டு இந்தியா சார்பாக மேரி இம்மாக்குலேட் மெட்ரிக் பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடியைச் சேரந்த 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் தூத்துக்குடி ஸ்பிக் நகரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தாரேஷ் மற்றும் பிரனேஷ் ஆகிய இருவரும் கராத்தே கருப்பு பட்டயத்தை வென்றனர். கருப்பு பட்டயத்தை வென்ற மாணவர்கள் 2 பேர் மற்றும் கராத்தே ஆசிரியர் முத்துராஜா ஆகியோர் இன்று (20.06.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.


