தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சென்னை யுயுயு இஞ்சினியரிங் கன்சல்டன்ஸ் ரூ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சார்பாக புனித ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழை, எளிய காசநோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 20.04.2022 (புதன்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணியளவில் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து மாவட்ட காசநோய் மையத்தின் நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர்.அ.ஆல்பர் சேக்ரட் செல்வின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் டாக்டர்.ஆ.முருகேஸ்வரி, சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ச.செல்வகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
புனித ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழை, எளிய காசநோயாளிகளுக்கு ஒரு மாத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், பலசரக்கு சாமான்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை யுயுயு இஞ்சினியரிங் கன்சல்டன்ஸ் ரூ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளர் திரு.அ.அப்துல் அஜீம் அவர்கள் வழங்கினார்கள்.
மாவட்ட காசநோய் மையத்தின் நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர்.அ.ஆல்பர் சேக்ரட் செல்வின் அவர்கள் பேசுகையில், காசநோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை மட்டும் போதாது, அவர்களுக்கு சிகிச்சை காலத்தில் தேவையான சத்தான உணவுப் பொருட்களும் உட்கொள்ள வேண்டும். ஆகவே, இதனை கருத்தில் கொண்டு யுயுயு இஞ்சினியரிங் கன்சல்டன்ஸ் ரூ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சார்பில் ரமலான் நோன்பை முன்னிட்டு தொடர்ந்து மூன்றாவது வருடமாக காசநோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வருவது மனிதநேயமிக்க செயலாகும். காசநோயை ஒழிக்க அரசுத் துறை மட்டுமல்லாமல் தனியார் துறையும் இணைந்து செயல்படுவதன் மூலம் 2025க்குள் காசநோயில்லா தூத்துக்குடி மாவட்டம் உருவாகும் எனக் கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவ மருந்தாளுநர் திரு.சி.வெங்கடேசன், நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துநர் திருமதி.அய்யம்மாள், ஆய்வகநுட்பநர்கள் திருமதி.ம.ராஜேஸ்வரி, திருமதி.ர.உஷாராணி, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் திரு.மு.வேம்பன் சுகாதாரத் துறை பணியாளர்கள், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் நன்றி கூறினார்.


