தென்திருப்பேரையில் பொன் ஏர் பூட்டும் நிகழ்ச்சி நடந்தது.
தென்திருப்பேரை பங்குனி மாதத்தினை முன்னிட்டு தேவேந்திர குல வேளாளரின் பண்பாட்டு நிகழ்ச்சியான பொன் ஏர் பூட்டும் நிகழ்ச்சி நடந்தது.
வயலில் பூஜை செய்து குட்டக்கரை பால்ராஜ், முதல் உழவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தேவேந்திர குல வேளாளர்களின் ஊர்களான குட்டக்கரை, தென்திருப்பேரை, மேல கடம்பா, கோட்டூர், குருகாட்டூர், மணத்தி, கல்லாம்பாரை உள்பட 13 ஊரை சேர்ந்த ஊர் குடும்பர்கள், தலைவர்கள் மற்றும் தென்திருப்பேரை சுற்றுவட்டார தேவேந்திர குல வேளாளர் ஆன்மீக அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு மாலை மற்றும் மரியாதையை வழங்கி சிறப்பித்தனர்.
இதில் தேவேந்திர குல வேளாளர் ஆன்மீக அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார், செயலாளார் கணபதி, பொருளாளர் மாரி துரைசாமி, துணைத்தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மேகநாதன், தம்புரான், முருகேசன், பலவேசம் குமார் என்ற பெருமாள், முத்து மணிகண்டன், கந்தன், சுரேஷ், கந்தசாமி, தங்கம், பெருமாள், ரத்தினம், ராஜேந்திரன், காசி, அன்பழகன், கணேசன் மற்றும் துவாதஸம் டிரஸ்ட் செயலாளர் ஆல்வான் மற்றும் ஆனந்த கிருஷ்ணன் ஸ்ரீனிவாசன் செல்ல கிருஷ்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.


