வல்லநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இணைவோம் மகிழ்வோம் சிறப்பு குழந்தைகளின் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தலின்பேரில் உலக மாற்றுத் திறனாளி தினம் கொண்டாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டார வளமையத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு குழந்தைகளுக்கான இணைவோம் மகிழ்வோம் நடந்தது. இதில் வல்லநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இதில் சிறப்பு குழந்தைகளைப் பற்றிய நேர்மறையான எண்ணங்கள், அவர்களின் செயல்பாடுகளை பற்றி மாணவ சக மாணவர்கள் எடுத்துரைத்தனர். சிறப்பு குழந்தைகளுடன் சக மாணவர்கள் இணைந்து கைகோர்த்து விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம், மாற்றுத்திறனாளிகளின் வட்டார ஒருங்கிணைப்பாளர் பீபேகம், ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜேந்திரன், சிவசங்கரி, வெயில்முத்து, சிறப்பு ஆசிரியர்கள் கிரேனா பூ, கலைச்செல்வி, காளியம்மாள், நிஷா மேரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.


