நாசரேத் பேரூராட்சியில் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க துவக்கவிழா கே.பி.பி.ஆர். காம்பவுண்டில் உள்ள முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் சங்க கொடியேற்றத்துடன் துவங்கியது.
தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில், நாசரேத் விஸ்வகர்ம பிரமுகர்கள் ராம் ஜூவல்லர்ஸ் சுப்பையா, போர்வெல் ராமச்சந்திரன், பிஎஸ்என்எல் பாலாசுப்பிரமணியன்,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் சிவா ஜூவல்லர்ஸ் முத்துக்குமார் வரவேற்று மாவட்ட பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.
நெல்லை மாவட்ட தலைவர் முத்துச்சாமி சங்க கொடியினை ஏற்றி வைத்து சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை,பணிகள் குறித்தும், சங்கத்தின் உறுப்பினர்கள் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் கிடைக்கும் சலுகைகள் என்ன என்பதையும், விஸ்வகர்ம கைவிஞைர்கள் சங்கம் குறித்த சந்தேகங்களையும் விளக்கி விரிவாக பதிலளித்தார். மேலும் நாசரேத்தில் 60 கைவினைஞர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்தனர்.
சங்கத்தின் மூலம் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் வங்கி கடன், முதுமை வயதுடைய கைவிஞைர்களுக்கு ஓய்வூதியம், கல்வி, சட்ட உதவிகள், அரசியல் மற்றும் வேலைவாய்ப்பு முதலியவற்றிற்கு மாநில சங்கத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் நாசரேத் கைவிஞைர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து தர உறுதியுடன் செயல்படுவோம் எனக்கூறினார்.நிறைவாக முத்துக்குமார் அடைக்கலம் நன்றி கூறினார்.


