நாசரேத், தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலயத்திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. வருகிற 26ம் தேதி சப்பர பவனி நடக்கிறது.
நாசரேத் அருகே உள்ள தைலாபுரம் பரிசுத்த உப கார மாதா ஆலய திருவிழா நேற்று 18ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.1ஆம் திருவிழாவான நேற்று (திங்கட்கிழமை) மாலை 7 மணிக்கு ஜெபமா லை,திருக்கொடியேற்றம், மிக்கேல் அதிதூதர் சப்பர பவனி, மறையுரை, நற்கரு ணை ஆசீர் நடைபெற்றது.
வடவை மறை வட்ட முதன் மைக்குரு மார்ட்டின் தலைமை வகித்து கொடி யேற்றினார்.தைலாபுரம் பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் வரவேற்றார். மங்களகிரி தூய வளன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ராபின் ஸ்டான்லி மறையுரை ஆற்றினார்.இதில் மன்னார்புரம் பங்குத்தந்தை எட்வர்ட், கள்ளிக்குளம் பனிமய அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் எஸ்.கே.மணி மற்றும் இறை மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலியும்,மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. வருகிற 26 ம்தேதி (செவ்வாய்க்கிழமை) 9ம் திருவிழா மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, திருவிழா சிறப்பு மாலை ஆராதனை தூத்துக்குடி மறை மாவட்ட குருகுல முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கிறது. இந்த ஆராதனையில் கள்ளிக்குளம் பனிமய அன்னை மெட்ரிக் பள்ளி முதல்வர் மணி மறையுரை ஆற்றுகிறார்.இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு அன்னையின் மற்றும் புனிதர்களின் திரு உருவ சப்பர பவனி நடக்கிறது.
27 ம் தேதி(புதன்கிழமை) 10ம் திருவிழா காலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலியும் சாத்தான்குளம் மறை வட்ட முதன்மை க்குரு ரவி பாலன் தலைமையில் நடக்கிறது. சோமநாத பேரி பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ் மறையுரை ஆற்றுகிறார். காலை 10 மணிக்கு திரு முழு க்கு வழங்குதல் நிகழ்ச்சி யும்,காலை 11 மணிக்கு அன்னையின் மற்றும் புனிதர்களின் திரு உருவ சப்பர பவனி யும் நடக்கிறது.அன்று மாலை5.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனி தென் மண்டல பணிக்குழுக்கள் ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடக்கிறது.
சவேரியார் புரம் பங்குத் தந்தை ரெமிஜியூஸ் மறையுரை ஆற்றுகிறார். இரவு 10 மணிக்கு இன்னிசை விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலய பங்குத் தந்தை ததேயுஸ் ராஜன் தலைமையில் நிர்வாக கமிட்டி தலைவர் கிறிஸ்டோபர், செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் பீற்றர், விழா கமிட்டி தலைவர் மனோகரன், கமிட்டி உறுப்பினர்கள் டோலர்,மரிய செல்வராஜ்,தியாக்கோன், அந்தோணி வினோத், இருதய பார்த்திபன், நோபட்,ஜேசுராஜா,மரிய சுதாகர் மற்றும் விழாக் குழுவினர், இறை மக்கள் செய்துள்ளனர்.


