செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா கோயில் அருகில் வீரத்துறவி ராமகோபாலன் ஜி பிறந்தநாள் விழா இந்து முன்னணி சார்பில் கொண்டாடப்பட்டது. கருங்குளம் வட்டார தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் இசக்கி முன்னிலை வகித்தார். சுந்தரபாண்டிய சாஸ்தா கோயில் அர்ச்சகர் சுந்தர வேளாளர்,திருவரங்க செல்லியம்மன் கோவில் அர்ச்சகர் சுடலையாண்டி கம்பர் உள்படப் பலர் கலந்து கொண்டனர். ராமகோபாலன் ஜி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


