இடையன்விளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குரும்பூர் பங்குத்தந்தை பபிஸ்டன் அடிகளார் தலைமையில், பிரகாசபுரம் பங்குத்தந்தை அந்தோணி இருதயதோமாஸ் அடிகளார் முன்னிலையில் சேதுக்குவாய்த்தான் பங்குத் தந்தை தாமஸ் அடிகளார் கொடியேற்றி திருவிழாவினை தொடங்கி வைத்தார். திருவிழாக்காலங்களில் நவநாள் திருப்பலி தினமும் நடைபெறுகிறது. 9-ஆம் திருவிழாவான வருகிற 25-ந் தேதி திருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடை பெறுகிறது.10-ஆம் திருவிழாவான 26-ந் தேதி காலை ஆடம்பர திருப்பலி நடைபெறுகிறது. முடிவில் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.ஏற்பாடுகளை குரும்பூர் பங்குத்தந்தை பபிஸ்டன் அடிகளார் தலைமையில் கச்சனாவிளை ஊராட்சி மன்ற தலைவர் கிங்ஸ்டன்மற்றும் திருவிழா கமிட்டி நிர்வாகிகள் செய்துள்ளனர்.


