நெல்லை திருச்செந்தூர் ரோடு சமாதானபுரத்தில் ‘ சீப்ஷாப் ‘ என்ற புதிய ரெடிமேடு ஷோரூம் திறப்பு விழா நடந்தது . ரையான் கிளாத்திங் உரிமையாளர்கள் கே.பி.எம்.ஜக்கரியா , கே.பி.எம்.அபுபக்கர் ஆகியோர் புதிய ஷோரூமை திறந்து வைத்தனர் . விழாவில் எம்.கே.எம் . குரூப்ஸ் உரிமையாளர்கள் எம் . கே.எம்.கபீர் , எம்.கே.எம்.புகாரி , ஷிபா ஆஸ்பத்திரி உரிமை யாளர் எம்.கே.எம்.ஷாபி , எம்.என்.எச் . உரிமையாளர் எம் . கே.எம்.நாகிப் , பா.ம.க. துணை தலைவர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி , எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு , கலர்ஸ் உரிமையாளர் மரைக்காயர் , ஜம்ஜம் பிரியாணி உரிமையாளர் , ஹக்கீம் , ஓட்டல் வைரமாளிகை உரிமையாளர் நியாஸ் மற்றும் வாடிக்கையாளர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர் . விழாவுக்கு வந்த அனைவரையும் ரையான் கிளாத்திங் மற்றும் ரிம்ஷா பிராபர்டிஸ் நிறுவனத்தினர் வரவேற்றனர் . திறப்பு விழாவையொட்டி அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன . சீப்ஷாப் ரெடிமேடுஷோரூமில் ஆண்கள் , பெண்களுக்கான அனைத்து ஆடை ரகங்களும் ரூ .29 முதல் ரூ .499 வரையிலும் வருடம் முழுவதும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக நிறுவனத்தினர் தெரிவித்தனர் .


