75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கொரோனா தொற்று நோய் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் 2வது அலை ஊரடங்கள் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு ஒருவேளை உணவு வழங்கிய, வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமி தொண்டர் குலம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் தன்னார்வலர் குழு 60க்கும் மேற்பட்ட இளைஞர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர், உயர்திரு, இரா.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நற்சான்றிதழை வழங்கினார்.இந்த_நிகழ்வில் வல்லநாடு கஸ்பா ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி சந்திரா முருகன், வல்லநாடு ராஜாகுளம் விவசாய பாசன சங்க தலைவர், திரு முருகன், தன்னார்வலர் குழு ஒருங்கிணைப்பாளர்திரு தங்கராஜ், திரு பழனிச்சாமி பசுமை தமிழ் தலைமுறை நிறுவனத்தலைவர் திரு சுகன் கிறிஸ்டோபர், 2017-18 ஆண்டிற்கான சமூக சேவை விருது பெற்ற திரு பாலசுந்தர விநாயகம், பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு நிர்வாகி வசவை திருகணேசன்,அமமுக நெல்லை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர், பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு கருங்குளம் ஒன்றிய செயலாளர், திரு பூல்பாண்டி,தன்னார்வலர்குழுஇளைஞர்கள் அரிஹர சுப்பிரமணியன்,மலையாண்டி சிதம்பரம்,சிதம்பரம், அந்தோணி,வினித், தர்மராஜ், சிதம்பரம், சுடலைமணி தம்புராஜ்,பரமசிவம், சிவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.


