கோவில்பட்டியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம், மற்றும் சஹாசங்கா நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு ஆரி ஒர்க் பயிற்சி நடந்தது.
சஹாசங்கா மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் சேர் பெர்சன் கல்பனா சங்கர் மற்றும் சஹாசங்கா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஹானா சங்கர், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணன், முதன்மை செயலாக்க அலுவலர் கொண்டா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில், முதன்மை பொது மேலாளர் ஜோசப்ராஜ், உதவி பொது மேலாளர் பன்னீர்செல்வம், முதன்மை மேலாளர் உமா மகேஸ்வரி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு 15 நாட்கள் ஆரி ஒர்க் பயிற்சி வழங்கப்பட்டது
இதில் பிச்சைத்தலைவன்பட்டி பகுதிகளிலிருந்து 21க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு பெண்கள் பயிற்சியில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பிச்சைத்தலைவன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மைதிலி ஊராட்சி செயலாளர் ஜெகதீஷ் தலைமை வகித்தார்கள் .முதன்மைமேலாளர் மதுரை அழகர் முன்னிலை வகித்தார்,மதுரை அழகர் தொழில் மேம்பாடு,மூலப்பொருட்கள் பெறுதல் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்தும் ஆரி ஒர்க் பயிற்சி குறித்து பயிற்றுனர் சாந்தி பயிற்சி அளித்தனர். கள ஓருங்கிணைப்பாளார் சிலுவைக்கொடி நன்றி கூறினார்.


