ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தும் அனைத்து திட்டப் பணிகளின் இணையதள பதிவினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் (2025 -26) நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், தொடர்ந்து கடம்பா அரசு மீன் குஞ்சு வளர்ப்பு மையம், திருச்செந்தூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 1.63 ஹெக்டர் அளவில் கடம்பா மீன் பண்ணையில் 450 சதுர மீட்டர் அளவில் ஆறு தொட்டிகள் வீதம் மொத்தமாக 2700 சதுர மீட்டரில் கட்லா ரோகு, மிருகால் போன்ற மீன் குஞ்சுகள் வளர்த்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மீன்களுக்கு வழங்கப்படும் கலவை தீவனங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.சரவணன், ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர் தாசன் (வ), ராஜா (கி), திருச்செந்தூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் உத்தண்டுராமன், மீன்துறை சார் ஆய்வாளர், உதவி பொறியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.


