தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லியில் கடந்த மாதம் 25-28 தேதிகளில் நடைபெற்ற 2வது CPSAT தேசிய அளவிலான Cerebral PALSY athletics சாம்பியன்ஷிப் போட்டிகளில் தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி ப்ளஸ் 1 மாணவி காயத்ரி கலந்து கொண்டு, 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகளில் மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கமும், சான்றிதழும் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாணவி காயத்ரி உள்ளிட்ட அனைவரும் மென்மேலும் வெற்றிகளை குவிக்க வேண்டும் என முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், பள்ளி செயலர் ஏ.பி.சி.வீ. சண்முகம், தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர்.


