தூத்துக்குடியில் காணாமல் போன பள்ளி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி டி.எம்.பி., காலனியைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகள் முத்துலட்சுமி (17), உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய விபரம் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


