இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறை, திருச்சி மண்டலம் சார்பில் பன்னாட்டு அருங்காட்சியக தினவிழா ஆதிச்சநல்லூரில் நடைபெற்றது. புதிதாக அருங்காட்சியகம் அமையவுள்ள ஆதிச்சநல்லூர் திருச்செந்தூர் பிரதானச்சாலை அருணா உணவகம் எதிரில் உள்ள இடத்தில் 18 ந்தேதி மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடந்தது. திருச்சி மண்டல இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் முனைவர் அருண் ராஜ் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் பேராசிரியர் முனைவர் சு. இராஜவேலு, மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பேராசிரியர் சுதாகர், ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சங்கர் கணேஷ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஸ்ரீ வைகுண்டம் கே.ஜி.எஸ் வரலாற்றுத் துறை ஆசிரியர் மாணிக்கம் , ஓய்வு பெற்ற ஐ.ஜி. மாசான முத்து, தடவியல் துறை முன்னாள் இயக்குனர் விஜயகுமார், சப் கலெக்டர் சிவசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ், ஸ்ரீவைகுண்டம் ஆணையாளர் சுரேஜ் ஆகியோர் பேசினர்.
சிறப்பு விருந்தினர்களை கவுரவ படுத்துதல் மற்றும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்திற்கான மூலப்பத்திரம் பெறுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.
இதில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைய இலவச இடம் கொடுத்த சங்கர் கணேஷ், மணிகண்டன், வைரவதேவர், சுந்தர் மற்றும் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டனர். அனைத்து இடத்தினையும் உடனடியாக தொல்லியல் துறைக்கு பட்டா மாற்றி கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சிங்கப்பன், ராமநாதன், உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் யத்தீஸ்குமார், முத்துகுமார், ராணிமோல், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷண்ன், ஆதிச்சநல்லூர் தமிழ் சங்கத்தினை சேர்ந்த முத்துராமலிங்கம், ஹரிகரன், துரை சரவணன், ராமகிருஷ்ணன், சீனிபாண்டியன், சுரேஷ், பாளை சதக்கப்துல்லா அப்பா கல்லூரி வரலாற்று துறை தலைவர் நசீர் முகமது, தமிழ்த்துறை அனுசியா, பா¬ ன ஜான்ஸ் கல்லூரி வராற்று துறை உதவி பேராசிரியர் ஜோசப் ராஜ், ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ் பேராசிரியர்கள் முருகன், சரவணன் , சந்தன லெட்சுமி, பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருச்சி மண்டல உதவி தொல்லியல் கண்காணிப்பு பொறியாளர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ வைகுண்டம் கே.ஜி.எஸ் கல்லூரி , பாளை ஜான்ஸ் கல்லூரி, பாளை சதக்கப்பதுல்லா அப்பா கல்லூரி வரலாற்றுத் துறை தமிழ்த்துறை மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி மூலமாக ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு அருங்காட்சியகம் கட்டும் பணி துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


