நீதிமன்ற உத்தரவை கண்டித்து பேட்மாநகரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாரணாசியில் அமைந்துள்ள பழமையான கியான்வாபி மசூதியில், தொழுகைக்காக இஸ்லாமியர்கள் ஒளு எனும் அங்கசுத்தி செய்யும் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாக, மசூதியில் கள ஆய்வு செய்ய கோரி மனுத்தாக்கல் செய்த இந்துத்துவ அமைப்பை சேர்ந்த ஒருவரின் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ அப்பட்டமாக மீறும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் எனவும், மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு துணை போகாமல் சட்டத்தின் ஆட்சியை ஒன்றிய, மாநில அரசுகள் நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக தூத்துக்குடு மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் பேருந்துநிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அஸ்ரப்அலி பைஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் பகுதி தலைவர் அப்துல்காதர், எஸ்டிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஸ்மான், மைதீன்கனி, கவ்து மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஊர் பொதுமக்கள் ஜமாத்தினர் பலர் கலந்து கொண்டனர்.


