தூத்துக்குடியில் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மீகம் போன்ற பல்வேறு துறைகளில் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த பா.சிவந்தி ஆதித்தனாரின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் வ.உ.சி மார்க்கெட் அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் ரவிசேகர், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துகுமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன், மாநகரச் செயலாளர் உதயசூரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


