புளியங்குளத்தில் இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் வேட்பாளர்.
வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் மற்றும் கூட்டணிக் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்றைய தினம் அவர் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன்பின்னர் அவர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தில் அமைந்துள்ள இம்மானுவேல் சேகரனார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அதன்பின்னர் அங்கிருந்த இளைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.


