ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீழப்பிடாகை கஸ்பா ஊராட்சியில் இன்றைய தினம் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணிக்கு ஸ்ரீவைகுண்டம் வட்டார மேலாளர் ஆஷா தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் உமாகனி, கூட்டமைப்பு தலைவி சாந்திலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களான ஸ்ரீவைகுண்டம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், கஸ்பா ஊராட்சி தலைவர் அருண், ஊராட்சி செயலர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பது குறித்து இந்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. வாக்காளர் விழிப்புணர்பு ஏற்படுத்தும் விதமாக இரு சக்கர வாகன பேரணியானது ஊராட்சி அலுவலகம் முன்பு துவங்கி அனைத்து தெருக்கள் வழியாக சென்றனர். இதில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.