மங்கலகுறிச்சி ஊரணியில் இரண்டு மலைப்பாம்புகள் வனத்துறையினர் மீட்டு வல்லநாடு மலைப்பகுதியில் விட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மங்களகுறிச்சி ஊரணியில் நேற்று இரவு இரண்டு மலைப்பாம்புகள் கிடப்பதை பார்த்த அப்பகுதி உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வனத்துறையினர், அந்த பகுதி மக்கள் துணையுடன் ஊரணியில் கிடந்த இரண்டு மலைப்பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக வல்லநாடு மலையில் கொண்டு விட்டனர்.
மங்களகுறிச்சி ஊரணி பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், மலைப்பாம்பு பிடிபட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.