தமிழகத்தில் நகர்புற ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை தொடங்கியது. தொடர்ந்து வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அந்தந்த வாக்குச்சாவடிகளில் குடும்பத்தினருடன் சென்று செலுத்தி வருகின்றனர்.
போலிசார் தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வாக்களிக்கும் மையத்திற்கு 100 மீட்டர் முன்பே போலிசார் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளது. எனவே ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலிசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வாக்கு பதிவு குறித்து நேரில் ஆய்வு செய்தார். அவர் அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலிசாரிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேரில் சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.


