வல்லநாட்டில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான ஆறாம் கட்டக பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டார வள மையம் சார்பில் வல்லநாடு சமுதாய நலக்கூடம் மற்றும் தெய்வச்செயல்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை மாணவர்களை கையாளும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான ஆறாம் கட்ட பயிற்சி நடந்தது.
இந்த பயிற்சியில் ஆசிரியர் கருத்தாளர்கள் கலந்து கொண்டு குறைதீர் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்ற நிலை அறிந்து அவர்களுக்கு கற்பித்தல் எவ்வாறு என்பதனை எளிய கற்றல் உபகரணங்களை கொண்டும் கற்பிப்பது என்பது சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சியில் 115 தொடக்கநிலை மாணவர்களை கையாளும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சியின் கருத்தாளராக வட்டார இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் வில்சன்ராஜ், வட்டார இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் பயிற்றுநர் ஒருங்கிணைப்பாளர் பீபேகம், ஆசிரியர் பயிற்றுநர்கள் இராஜேந்திரன், சிவசங்கரி, வெயில்முத்து, தலைமை ஆசிரியர்கள் விஜயலட்சுமி, நாகராணி கிருபை அன்னாள், உதவி ஆசிரியர்கள் வனிதா, பவளக்கொடி, பத்மா, லில்லி தவமணி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கருங்குளம் வட்டார மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் செய்திருந்தார்.


