சோனகன்விளையில் சர்வதேச மலை தினத்தை முன்னிட்டு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பனை மர விதைகள் விதைக்கும் பணி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் இலக்கை அடைதற்காக தொடர்ச்சியாக பனை மர விதைகளை விதைக்கும் பணியில் மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தினர் மிக தீவிரமாகவும் ஈடுபட்டு, செயல்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம், அம்மன்புரம் அடுத்த சோனகன்விளை, வள்ளிவிளை, துலுக்கன்குளம், குளத்துக்கரை பகுதியில் இன்றையதினம் சர்வதேச மலை தினத்தை முன்னிட்ட பனை மர விதைகள் விதைக்கும் பணி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ்ஜேகென்னடி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் தாசில்தார் லெனின் கலந்து கொண்டு பனை மர விதை விதைக்கும் பணியை துவக்கி வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தென் மண்டல ஒருங்கிணைப்பாளரும், தூத்துக்குடி மாவட்ட தலைவருமான ராஜ்கமல், வள்ளிவிளை ஊர் பிரமுகர்கள் அழகேசன், வெங்கடேஷ், பொன்னுச்சாமி, கண்ணன், ராமச்சந்திரன், கலைச் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பாஸ்கர், வினோத், சேகர், சாது, சுந்தர் சிங் மற்றும் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், தொண்டு நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து பனைமர விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பனையை வளர்ப்பதற்கும், பனையை பாதுகாப்பதற்குமான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். முன்னதாக கோடீஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் பால்துரை நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள் செய்தனர்.


