இன்றைய (18/12/2024) தினத்தந்தியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய முத்துக்கிளி நாவல் விமர்சனம் வெளிவந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது.
தாயை இழந்த முத்துக்கிளி என்ற இளம் பெண், தந்தையின் பராமரிப்பில் நெல்லையில் வசித்த போது தீடீரென்று மாயமானதால் அவளை தேடிக் கண்டு பிடிக்க பயணப்பட்ட நிகழ்வுகளால் இந்த நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. மாயமான முத்துக்ளி, மும்பைக்கு கடத்தப்பட்டாள் என்பதை , இறந்த பெண் ஒருவரின் ஆவியுடன் பேசுபவர் மூலம் அறிந்த அவரது உறவினர்கள், செல்போன் உதவி கொண்டு, அவள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து மீட்டு வருவதாக கதை நகர்ந்து செல்கிறது. அமானுஷ்யமான தகவல்கள், ஆவியுடன் பேச்சு, மும்பையில் வசிக்கும் திருநங்கைகளின் நல்ல உள்ளத்தால் கிடைக்கும் உதவிகள் ஆகியவற்றை இணைத்து இருப்பது, நாவலை ரசித்துப் படிக்க உதவுகின்றன.
(ஆசிரியர்-முத்தாலங்குறிச்சி காமராசு, வெளியீடு – யாவரும் பப்ளிஷர்ஸ் விலை .ரூ 280 செல் 9024261472)


