சமூக ஆர்வலர் பாண்டியராஜன் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு தென்னக ரயில்வே பதில் அளித்துள்ளனர்.
அதில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வரை உள்ள ரயில்பாதையில் பாளையங்கோட்டை, ஆழ்வார்திருநகரி, கச்சனாவிளை, தாதன்குளம் ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க திட்டம் உள்ளதாகவும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடை நீளத்தை அதிகரிக்கை கோரிக்க விடுத்துள்ளதாகவும் விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் திருநெல்வேலி-செங்கோட்டை வழித்தடத்தில் நடைமேடைகளை நீட்டிக்கும் திட்டம் இல்லை எனவும் பதில் அளித்துள்ளனர்.


