தூத்துக்குடி மாவட்டத்தில் அவ்வையார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : 2023ஆம் ஆண்டிற்கான உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒரு நபருக்கு அவ்வையார் விருது, ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் சால்வை வழங்கப்படும் என ஆணை பெறப்பட்டுள்ளது. தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல்.
மேற்காணும் தகுதியுடையோர் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 10.12.2022க்கு விண்ணப்பம் செய்த பின் விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விபரம் குறித்து 1 பக்க அளவில் தமிழ் (மருதம்) மற்றும் ஆங்கிலத்தில் (Soft Copy and Hard Copy) அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் கருத்துரு(Booklet-2) (தமிழ்-1 மற்றும் ஆங்கிலம்-1) மற்றும் Passport Size Photo உடன் இவ்வலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 12.12.2022 -க்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி தொலைப்பேசி எண்:0461-2325606 என்ற முகவரியில் சமர்ப்பிக்கும்படி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


