மூக்குப்பீறி ஊராட்சி யில் புதிதாக ரேஷன் கடை கட்டுவ தற்கு ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி ஊராட்சி ஞானராஜ் நகரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது . ஊராட்சி மன்ற தலைவர் கமலா கலையரசு தலைமை வகித்தார்.தூய மாற்கு ஆலய சபை ஊழியர் ஜெனோ ஆரம்ப ஜெபம் செய்தார்.
ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மனும், திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான ஜனகர் புதிதாக ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். ஊராட்சி துணை தலைவர் தனசிங் முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி உறுப்பினர்கள் பாலசுந்தர், கலை அரசு, ஆறுமுகம், அந்தோணி கிறிஸ்டி, பாக்கியசீலி , பிச்சைகனிமற்றும் திமுக கிளை செயலாளர் முத்துவேல், ஒன்றிய பிரதிநிதி மணிமாறன், ராபின், அன்பு, அருள் , சவான், கணேசன், சித்திரை செல்வி, விஜயா உள்பட கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் ஸ்டெல்லா செய்திருந்தார்.


