தூத்துக்குடியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள அவரது சிலைக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டல தலைவர்கள் சேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் கோபால், அருணாசலம், ராஜன், கிறிஸ்டோபர், பிரபாகர், சின்னகாளை, தனபால் அங்குசாமி, ராஜரத்தினம், காமாட்சி தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


