தூத்துக்குடி சிவன் கோவிலில் அமைந்துள் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பிரசித்திபெற்ற சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் அம்பாள் கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மகமை பரிபாலன சங்கம் சார்பில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13ஆம் தேதி காலை துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதணை செல்வம் பட்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் சுப்ரமணிய சுவாமி மகமை பரிபாலன சங்க தலைவர் எஸ் பிரம்மநாயகம் பிள்ளை, செயலாளர் எம்எஸ்எஸ் கந்தப்பன் பிள்ளை, துணைத் தலைவர் ஏ.ராமலிங்கம் பிள்ளை, உதவி செயலாளர் எஸ்.தியாகராஜன் பிள்ளை உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


