தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி ராஜகோபால் நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ஆவுடையப்பன் (60). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பெருமாள் மகன் சுப்பையா (55). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது இரு சக்கர வாகனத்தை, ஆவுடையப்பனின் வீட்டின் முன்பு நிறுத்திக் கழுவிக் கொண்டு இருந்தாராம். இதனை ஆவுடையப்பன் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரத்திலிருந்து வந்த சுப்பையா மற்றும் அவரது மகன்கள் பிரகாஷ் (21), ராம் ஜெயந்த் (18) ஆகிய மூவரும் சேர்ந்து இன்று ஆவுடையப்பனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் காவல்துறை வழக்குப் பதிவு செய்து சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரது மகன்கள் பிரகாஷ், ராம் ஜெயந்த் ஆகிய 2 பேரைத் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


