ஆதித்தனார் கல்லூரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
பெரியார் பிறந்த நாள் விழா சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி. சமூக நீதி நாள் உறுதிமொழியை வாசித்தார். அதனை கல்லூரிப் பேராசிரியர்கள் அலுவலர்கள் மாணவர்கள் ஏற்றனர். இதில் பேராசிரியர்கள் டாக்டர் அன்பரசன், டாக்டர் வேலாயுதம், டாக்டர் கதிரேசன், பாலகிருஷ்ணன், அலுவலக கண்காணிப்பாளர் உள்துறை மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


