உலக நாகரீகத்தின் தொட்டில் என ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை வசம் உள்ள 114 ஏக்கரைச் சுற்றி கடந்த 2019ம் ஆண்டு முதல் ரூபாய் 2 கோடி மதிப்பில் சுற்றிவேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தற்போது அந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேலி அமைப்பதற்காக ஆங்காங்கே பரம்பு சுற்றி பல்வேறு இடங்களில் இரும்பு கம்பிகள் போடப்பட்டிருந்தன. இந்த நிலையில் 4 இரும்பு கம்பிகளை இரவோடு இரவாக மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதன் மதிப்பு 25 ஆயிரம் ஆகும். இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை சார்பில் சார்பில் செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலிசார் வழக்குப்பதிவு செய்து திருடியவர்களை தேடி வருகின்றனர்.


